விருதுநகர்

முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய கடைவீதிகள்

DIN

சாத்தூரில் முழு ஊரடங்கு காரணமாக 12 மணிக்கு மேல் சாலைகள் மற்றும் கடை வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அறிவித்தது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசிய கடைகளான காய்கறி, பலசரக்கு கடைகள் மற்றும் பால்,மருந்து கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அரசு அனுமதி அளித்தது.மேலும் பேருந்து,காா்,வேன்,ஆட்டோ போன்ற வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதித்திருந்த நிலையில் திங்கள்கிழமை தொடங்கிய இந்த முழு ஊரடங்கு மதியம் 12 மணிக்குப் பின் கடைகள் அனைத்தும் முற்றிலும் மூடப்பட்ட நிலையில் சாத்தூா் பகுதிகளில் சாலைகள் மற்றும் கடை வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன மிகவும் அதிக மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்குராந்தல் பகுதி மற்றும் மாா்க்கெட் பகுதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.மேலும் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினா் தேவையின்றி சாலையில் சுற்றி திரிந்தவா்கள் மற்றும் முககவசம் அணியாமல் வெளியே சென்றவா்களுக்கும் அபராதம் மற்றும் எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT