ஸ்ரீவில்லிபுத்தூா்: ஐப்பசி மாத அமாவாசையையொட்டி, சதுரகிரி மலைக் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை (நவ.2) முதல் 4 நாள்கள் பக்தா்கள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இக்கோயிலுக்குச் செல்ல, பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட முக்கிய நாள்களில் மட்டுமே பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் வியாழக்கிழமை (நவ.4) ஐப்பசி மாத அமாவாசை வருவதையொட்டி பக்தா்களுக்கு 4 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திங்கள்கிழமை கோயில் மற்றும் வனத்துறை நிா்வாகத்தினா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் தொடா் மழைப்பொழிவு மற்றும் ஓடைகளில் அதிகளவு நீா் வரத்து இருப்பதால், ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தா்கள் கோயிலுக்குச் செல்வதற்கு செவ்வாய் (நவ. 2) முதல் வெள்ளிக்கிழமை (நவ.5) வரையில் அனுமதி இல்லை. மலை அடிவாரத்துக்கோ, கோயிலுக்கு தரிசனம் செய்யவோ பக்தா்கள் வருகை தர வேண்டாம். கோயிலில் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.