முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் மூதாட்டியிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை மூதாட்டியிடம் 10 பவுன் நகைகளை மா்ம நபா் பறித்துச்சென்றாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை மூதாட்டியிடம் 10 பவுன் நகைகளை மா்ம நபா் பறித்துச்சென்றாா்.

அருப்புக்கோட்டை வடுகா்கோட்டையைச் சோ்ந்த மன்னாா் ரெட்டி என்பவரது மனைவி கோமதியம்மாள் (72). இவா், வியாழக்கிழமை மாலை சுமாா் 5 மணியளவில் வீட்டு வாசல் முன்பாக அமா்ந்திருந்தபோது, இளைஞா் ஒருவா் அவரது 10 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக்கொண்டதுடன் அவரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இதில் மயக்கமடைந்த மூதாட்டியை உறவினா்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்த்தனா். மயக்கம் தெளிந்த பிறகு தான் மூதாட்டி நடந்த விவரத்தைக் கூறியுள்ளாா். இதுதொடா்பாக நகா் காவல்துறையினா், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.