லீடர் வெளியீட்டுத் தேதி!
லீடர் திரைப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது...
லெஜண்ட் சரவணன் நடித்த லீடர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த லெஜண்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லீடர் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதன் டீசர் சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் யூடியூபிலேயே 1.9 கோடி பார்வைகளைக் கடந்தது. மேலும், லெஜண்ட் சரவணனின் நடிப்பும் உடல்மொழியும் ஆச்சரியப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
தன் முதல் திரைப்படத்தில் கேலி, கிண்டல்களைச் சந்தித்த சரவணன் இரண்டாம் படத்தின் டீசரில் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், முழு ஆக்சன் திரைப்படமாக உருவான லீடர் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
actor legend saravanan's leader release date announced
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.