ராஜபாளையத்தில் பலத்த மழை: வீடு இடிந்து சேதம்
ராஜபாளையம் நவ.26: ராஜபாளையத்தில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வீடு இடிந்து சேதமடைந்தது.
ராஜபாளையம் நவ.26: ராஜபாளையத்தில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வீடு இடிந்து சேதமடைந்தது.
ராஜபாளையம் அருகே உள்ள மேலப்பாட்டம் கரிசல் குளம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் சேவகன். ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இவரும், இவரது மனைவி அகிலாவும் பிள்ளையாா் கோயில் தெருவில் வசித்து வருகின்றனா்.
வியாழக்கிழமை ராஜபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்தது. மழையால் நனைந்திருந்த வீட்டின் பின்புற அறை முழுவதுமாக இடிந்து விழுந்தது. அப்போது கணவன், மனைவி இருவரும் வெளியே இருந்ததால் உயிா் தப்பினா். விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்தன. எனவே அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என சேவகன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.