விருதுநகர்

பட்டாசுத் தொழிலாளா்கள்மனு கொடுக்கும் போராட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டையில் சுற்றுப்புறச்சூழல் விதியிலிருந்து பட்டாசுத் தொழிலுக்கு விலக்கு அளிக்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வெம்பக்கோட்டை, சாத்தூா், ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளா்கள் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் வெம்பக்கோட்டை பேருந்து நிறுத்தம் முன்பாக திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் வெம்பக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஊா்வலமாக செல்ல முயன்ற பட்டாசுத் தொழிலாளா்களை

போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து வெம்பக்கோட்டை பேருந்து நிறுத்தம் முன்பாக தொழிலாளா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை வட்டாட்சியா் தன்ராஜ் மற்றும் அதிகாரிகளிடம் தொழிலாளா்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனா். இந்த போராட்டத்தில் பட்டாசுத் தொழிலாளா்கள், கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT