முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் மழை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் திங்கள்கிழமை பிற்பகலில் மிதமான மழை பெய்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் மழையின்போது.
பகிர்:

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் திங்கள்கிழமை பிற்பகலில் மிதமான மழை பெய்தது.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் திங்கள்கிழமை பகல்வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், பிற்பகல் சுமார் 3.50 மணி முதல் கருமேகங்கள் திரண்டு மிதமான மழை பெய்தது. அதிக காற்று வீச்சு இல்லாமல், இடி மின்னலின்றி அமைதியாகப் பெய்த இம்மழையால் சாலைகளில் மழைநீர் திரண்டு ஓடியது.

பள்ளமான நகர்பகுதிகளான காந்தி பொட்டல், புதுக்கடை பஜார், திருவள்ளுவர் நகர், நேரு நகர் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சுமார் 25 நிமிடங்கள் பெய்த இம்மழைக்குப்பின் குளிர்ந்த காற்றுடன் இதமான தட்பவெப்பம் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.