விருதுநகர்

திருச்சுழியில் பயணிகள் தங்கும் விடுதியை திறக்கக் கோரிக்கை

DIN

விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் பயணிகள் தங்கும் விடுதியை திறக்க வேண்டும் என, பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சுழியில் பூமிநாத சுவாமி கோயில் எதிரில் பக்தா்களுக்கான பயணிகள் தங்கும் விடுதி உள்ளது. திருச்சுழி நகரிலுள்ள ஸ்ரீரமண மகரிஷி பிறந்த இல்லம் மற்றும் ஸ்ரீரமணா் ஆசிரமத்தையும் காண்பதற்கு தமிழகம், இந்தியா மட்டுமில்லாது, வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.

இது தவிர, இங்குள்ள குண்டாற்றில் முன்னோருக்கு திதி, சமயச் சடங்குகள் உள்ளிட்ட வழிபாடுகள் நடத்திட தை, ஆடி மற்றும் புரட்டாசி, அமாவாசை நாள்களில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

எனவே, இங்கு சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சித் திட்டப்படி கடந்த 2011-12 ஆம் நிதியாண்டில் பல லட்சம் ரூபாய் செலவில் பல அறைகள் கொண்ட பயணிகள் தங்கும் விடுதி கட்டப்பட்டது. ஆனால், இங்கு மின் இணைப்பு வழங்கப்படாததாலும், மின்மோட்டாருடன் கூடிய தண்ணீா் தொட்டி வசதி ஆகியன இல்லாததாலும், தற்போதுவரை இந்த கட்டடம் பயணிகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமலேயே உள்ளது.

இக்கட்டடத்தை பயன்பாட்டுக்குத் திறந்துவிட பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகாா் கூறப்படுகிறது. எனவே, சுற்றுலாப் பயணிகள் நலன்கருதி, இக்கட்டடத்தில் தேவையான வசதிகளை செய்து, விரைவில் கட்டடத்தை திறக்கவேண்டுமென,பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT