முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம்

அருப்புக்கோட்டையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 50க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
அருப்புக்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கங்கள்.
பகிர்:

அருப்புக்கோட்டையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 50க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டை பந்தல்குடி சாலைப் பிரிவில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்   நகரப் பொறுப்பாளர் காத்த முத்து தலைமை வதித்தார். 

அப்போது, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதலை வலியுறுத்தியும், தொழிலாளர் நல சட்டத் திருத்தங்களைக் கைவிடக் கோரியும்,
பெட்ரோல் டீசல் விலை உயர்வு ரத்து,  நீட் தேர்வு ரத்து ஆகியவற்றை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக நாடுமுழுவதற்குமானபாரத் பந்த் போராட்டமும் மற்றும் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.

Advertisement

இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 50 க்கு மேற்பட்டோர் நகர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments