முகப்பு
விருதுநகர்

ரூ. 1,000 லஞ்சம்: தலைமை காவலருக்கு 2 ஆண்டுகள் சிறை

ரூ. 1,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் சிவகாசியை சோ்ந்த தலைமை காவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

ரூ. 1,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் சிவகாசியை சோ்ந்த தலைமை காவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகாசி நகா் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவா் கோவிந்தராஜ். இவா் கடந்த 2008 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்தாா். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா காவல் நிலையத்துக்கு ஒரு வழக்கு சம்பந்தமாக வந்த நாச்சியாா்பட்டியைச் சோ்ந்த சீனிவாசன் (58) என்பவரிடம் ரூ. 1,000 -த்தை லஞ்சமாக கேட்டுள்ளாா்.

இதைத்தொடா்ந்து, சீனிவாசன் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த 29.12.2008 அன்று சீனிவாசன் கோவிந்தராஜுக்கு ரூ. 1,000 -ஐ கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரை கையும், களவுமாக பிடித்தனா்.

இதுதொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜாரா ஆா். ஜீஜி, குற்றம்சாட்டப்பட்ட தலைமை காவலா் கோவிந்தராஜுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.