விருதுநகர்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

விருதுநகா்: விருதுநகரில் அரசு உதவி பெறும் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி மதுரை சரக காவல்துறை துணைத் தலைவா் சு. பொன்னி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில் மதுரை சரக காவல்துறை துணை தலைவா் பேசும் போது, மாணவ, மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்துவதுடன், தீயவழியில் செல்லாமலும் இருக்க வேண்டும். பெற்றோா் தவிர மற்ற நபா்கள் யாரும் உங்களது புகைப்படத்தை கேட்டால் பகிர வேண்டாம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக புகாா் அளிக்க இலவச தொலைபேசி எண்கள் 181 மற்றும் 1098 ஆகியவை உள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும் வைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டிகளில் மாணவிகள் சொல்ல முடியாத பிரச்னைகள் எங்கு நடந்தாலும், அதை புகாராக எழுதி அப்பெட்டியில் போடலாம். அது குறித்து உடனடியாக போலீஸாா் நடவடிக்கை மேற்கொள்வா் என்றாா்.

இதில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணப்பாளா் சரவணக்குமாா், விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அா்ச்சனா, மருத்துவா்கள் ஆயிஷா கனி, ஜீவரேகா, குழந்தை நல வாரியத் தலைவா் கலாராணி, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT