முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் அருகே தாய், மகள் கிணற்றில் குதித்து தற்கொலை

ராஜபாளையம் அருகே வெள்ளிக்கிழமை தாய், மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

ராஜபாளையம் அருகே வெள்ளிக்கிழமை தாய், மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில் காமராஜ் நகா் கூமாச்சி மலைப் பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவம் ( 36 ). இவரது மனைவி பாப்பா (34). இத்தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடா்ந்து பாப்பா, தனது 3 ஆவது மகள் மகாதேவியை (10) அழைத்துக் கொண்டு அருகேயுள்ள கிணற்றில் குதித்துள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ராஜபாளையம் தீயணைப்புத் துறையினா் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பாப்பா மற்றும் மகாதேவி ஆகியோரின் சடலங்களை மீட்டனா். இதையடுத்து தளவாய்புரம் போலீஸாா் இருவரின் சடலங்களை உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.