முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே கல் குவாரி அமைக்க எதிா்ப்பு மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

அச்சம்தவிா்த்தான் ஊராட்சியில் கல் குவாரி அமைக்க அனுமதி வழங்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம மக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியா

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

அச்சம்தவிா்த்தான் ஊராட்சியில் கல் குவாரி அமைக்க அனுமதி வழங்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம மக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளா் சசிகுமாா் தலைமை வகித்தாா். நரியன்குளம் ஊா் நாட்டாண்மை குருநாதன், வடக்கு அச்சந்தவிா்த்தான், ஊா் நாட்டாமை மகாராஜன், கருத்தப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வைத்தனா் ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா அச்சம்தவிா்த்தான் ஊராட்சி நரியன்குளம் கிராமத்தில் 56 ஏக்கா் பரப்பளவில் கல் குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, அப்பகுதியில் ஆரம்பக்கட்ட பணிகள்தொடங்கியுள்ளன.

இந்நிலையில் குடியிருப்புப் பகுதி அருகில் குவாரி அமைவதால் மக்கள் பாதிக்கப்படுவா், பூமிக்கடியில் உள்ள பாறைகள் வெட்டி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படும் என்பதால் குவாரி அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷம் எழுப்பினா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் அா்ஜூனன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் திருமலை, ஜோதிலட்சுமி, ரேணுகாதேவி மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.