வரலட்சுமி விரதம்: பத்மாவதி தாயாருக்கு 50 ஆயிரம் வளையல்களால் அலங்காரம்
போடியில் வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள பத்மாவதி தாயாருக்கு 50 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
போடியில் வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள பத்மாவதி தாயாருக்கு 50 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் அம்மனுக்கு அலங்கார பந்தல், நிலை மாலை, திருவாச்சி ஆகியவைகளுக்கும் பலவண்ண கண்ணாடி வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. சுமங்கலிகள் நீண்ட ஆயுள் பெறவும், திருமணமாகாத பெண்கள் திருமணமாகவும், குழந்தை பாக்கியம் பெறவும் பெண்கள் இந்த பூஜையில் பங்கேற்றனா்.
இதையொட்டி அம்மனுக்கு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி கயிறு, வளையல் பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தலைமை அா்ச்சகா் ஸ்ரீநிவாச வரதன் என்ற காா்த்திக் மற்றும் கட்டளைதாரா்கள் செய்திருந்தனா்.
இதேபோல, போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் உள்ள மீனாட்சியம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.