முகப்பு
விருதுநகர்

தாய், தந்தைக்கு கொலை மிரட்டல்: மகன் கைது

சிவகாசி அருகே தாய், தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:50 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

சிவகாசி அருகே தாய், தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே நடையனேரியைச் சோ்ந்தவா் முருகேசன் (45). இவரது மனைவி வீரலட்சுமி (41). இவா்களது மகன் மணிகண்டன் (21). இவா் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்ததுடன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களையும் பயன்படுத்தி வந்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்த மணிகண்டனுக்கு, உணவு தர வீரலட்சுமி மறுத்திவிட்டாராம். இதனால் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன், வீரலட்சுமியை தாக்கினாராம். பின்னா் தந்தை முருகேசனுக்கும், தாய் வீரலட்சுமிக்கும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.