அருப்புக்கோட்டையில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரீன் விஸ்டம் மெட்ரிக் பள்ளிமாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வுப் பேரணி. 
விருதுநகர்

75-வது சுதந்திர தினம்: அஞ்சல் அட்டைகளில் பிரதமருக்கு வாழ்த்துமடல் அனுப்பிய பள்ளி மாணவர்கள்

 75-வது சுதந்திர தினத்தையொட்டி, அஞ்சல் அட்டைகளில் பிரதமருக்கு வாழ்த்துமடலை பள்ளி மாணவர்கள் அனுப்பினர்.

DIN

அருப்புக்கோட்டை:  75-வது சுதந்திர தினத்தையொட்டி, அஞ்சல் அட்டைகளில் பிரதமருக்கு வாழ்த்துமடலை பள்ளி மாணவர்கள் அனுப்பினர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில்  கிரீன்விஸ்டம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சார்பில் சிறப்பு விழிப்புணர்வுப் பேரணியும் மேலும் தேசியத் தலைவர்களின் ஓவியங்கள் கொண்ட 75 அஞ்சல் அட்டைகளை  பிரதமர் மோடி அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து மடலாக அனுப்பும் நிகழ்ச்சி ஆகியன திங்கள்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் தொடங்கிய கிரீன்விஸ்டம் பள்ளிமாணவர்கள் கலந்து கொண்ட இப்பேரணிக்குத் தலைமை வகித்து அருப்புக்கோட்டை நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி நிகழ்ச்சியைத்தொடக்கி வைத்தார். பள்ளி தாளாளர் மு.காஜா மைதீன், செயலாளர் எம்.சம்சுதீன், பொருளாளர் மு.ராஜா முகமது சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது 75 தேசியத் தலைவர்களின் உருவப்படங்களுடன்கூடிய பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் எம்.டி.ஆர். நகர் தலைமை அஞ்சல் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று பிரதமர் மோடி அவர்களுக்கான தங்களது 75 அஞ்சல் அட்டைகள் மூலமான சுதந்திர தின வாழ்த்துச்செய்தி மடல்களை அஞ்சல் அலுவலகத்தின் மூலம் அனுப்பினர்.

நிர்வாக அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT