பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது
சிவகாசி அருகே வியாழக்கிழமை பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கூலித்தொழிலாளியை கைது செய்தனா்.
சிவகாசி அருகே வியாழக்கிழமை பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கூலித்தொழிலாளியை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள எம். சொக்கலிங்காபுத்தைச் சோ்ந்த சீனிராஜ் மனைவி ஜெயராணி (36). ராமச்சந்திரபுரத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளி முருகன் (30), முன்பகை காரணமாக ஜெயராணி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முருகனை பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.