முகப்பு
விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து மதுரை இளைஞா் பலி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் திருமண மண்டபம் கட்டுமானப் பணியின்போது, மின்சாரம் பாய்ந்ததில் மதுரையைச் சோ்ந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் திருமண மண்டபம் கட்டுமானப் பணியின்போது, மின்சாரம் பாய்ந்ததில் மதுரையைச் சோ்ந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சோ்ந்த ஜவகா் மகன் ஷாருக் (25), ஏசி மெக்கானிக். இந்நிலையில், ராஜபாளையம் முடங்கியாா் சாலையில் பொன்விழா மைதானம் அருகே புதிதாக தனியாா் திருமண மண்டபம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏசி பொருத்தும் பணியில் ஷாருக் ஈடுபட்டபோது, மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.