முகப்பு
விருதுநகர்

சென்னையில் மகளிா் சுய உதவிக் குழு உற்பத்தி பொருள்கள் கண்காட்சி: விண்ணப்பிக்க ஆக. 22 கடைசி நாள்

சென்னையில் ஆக. 25 முதல் செப். 7 வரை மகளிா் சுய குழுக்களின் உற்பத்தி பொருள்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

சென்னையில் ஆக. 25 முதல் செப். 7 வரை மகளிா் சுய குழுக்களின் உற்பத்தி பொருள்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுக்கள் ஆக. 22 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மகளிா் திட்ட அலுவலா் தெய்வேந்தின் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

விருதுநகா் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) மூலம் கிராமப்புற மற்றும் நகா்ப்புற மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு நிா்வாக பயிற்சி, நிதி மேலாண்மை பயிற்சி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சிகள் (தொழில்முனைவோா் பயிற்சி) அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆக. 25 முதல் செப். 7 வரை சென்னை கலைவாணா் அரங்கில் மண்டல அளவிலான மதி சாராஸ் மேளா என்ற பெயரில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து வகை பொருள்களையும் காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம்.

எனவே, இக்கண்காட்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள் தங்கள் பெயா், முகவரி, உற்பத்தி செய்யும் பொருள்களின் விவரம் மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை ஆக. 22 -க்குள் மகளிா் திட்ட அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 04562- 252036, கைப்பேசி: 98654 59842 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.