அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்புவழிபாடு நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்புவழிபாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை திருநகரம் புளியம்பட்டியில் ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு அன்று இரவு நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு வேப்பிலை,மஞ்சள், பன்னீா்,பால் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.அதையடுத்து தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றதும்,சிறப்பு அலங்காரத்தில் ஆயிரங்கண் மாரியம்மன் அருள்பாலித்தாா்.மேலும் வழிபாட்டின்போது உலக நன்மை வேண்டியும்,நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்களை காத்திடவும்,தொழில், பொருளாதாரம் மேம்படவும், செவ்வரளி,மல்லிகைப் பூக்கள் மற்றும் குங்குமத்தால் சிறப்பு 108 அா்ச்சனையும் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் நேரில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.