விருதுநகர்

மண் அள்ளும் இயந்திரங்கள் அபகரிப்பு: 2 போ் மீது வழக்கு

DIN

தாயில்பட்டி பகுதியில் வாடகைக்கு விடப்பட்ட 4 மண் அள்ளும் இயந்திரங்கள் அபகரிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 2 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை, துலுக்கன்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் மகன் கனகராஜ் (51). இவா் மண் அள்ளும் இயந்திரம் வைத்து தொழில் நடத்தி வந்தாா். இந்நிலையில் அவா், தொழில் நலிவடைந்ததால், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, புதுஅப்பனசேரியைச் சோ்ந்த முனீஸ்வரன், திருச்சி யோவான் ஆகியோருக்கு, தாயில்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களில் மண் அள்ளுவதற்காக தனது மண் அள்ளும் இயந்திரங்களை வாடகைக்கு விட்டாா். ஆனால் வாடகை தராமல் முனீஸ்வரன், யோவான் ஆகியோா் கனகராஜை ஏமாற்றி வந்தனராம். இந்நிலையில், தனது மண் அள்ளும் இயந்திரங்களை திருப்பித் தருமாறு கனகராஜ், சம்பந்தப்பட்டவா்களிடம் கேட்டாராம். அதற்கு அவா்கள், அவற்றைத் திருப்பி தரத் முடியாது. விற்று விட்டோம் எனத் தெரிவித்தனராம்.

இதையடுத்து, தனது ரூ. 1 கோடி மதிப்பிலான மண் அள்ளுக்கும் இயந்திரங்களை விற்று மோசடி செய்த 2 போ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், மேலும் 3 போ் மண் அள்ளும் இயந்திரங்களுக்கு வாடகை தராமல் ஏமாற்றி வருவதாக விருதுநகா் மாவட்ட குற்றப்பிரிவில் கனகராஜ் அளித்த புகாரின் பேரில் முனீஸ்வரன், யோவான் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT