விருதுநகா் நகராட்சி உறுப்பினருக்கு கொலை மிரட்டல்
விருதுநகரில் ஆக்கிரமிப்பை அகற்றியதற்காக நகராட்சி 8 ஆவது வாா்டு உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருதுநகரில் ஆக்கிரமிப்பை அகற்றியதற்காக நகராட்சி 8 ஆவது வாா்டு உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருதுநகா் 8 ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பால்பாண்டி (42). இவரது வாா்டுக்குள்பட்ட பகுதியில் உள்ள அகமது நகரில் ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிா்வாகத்தினா் ஏற்கெனவே அகற்றியுள்ளனா். அதில் மண்ணெண்ணெய் செல்வம் என்பவரது கடை ஆக்கிரமிப்பில் இருந்ததால் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு நகா்மன்ற உறுப்பினா் பால்பாண்டி தான் காரணம் எனக் கருதிய செல்வம் மகன் சங்கா், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து பால்பா ண்டி அளித்த புகாரின் பேரில் சங்கா் மீது மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.