திருத்தங்கலில் கட்டடத் தொழிலாளி மாயம்
திருத்தங்கலில் கட்டடத் தொழிலாளியை காணவில்லை என போலீஸில் வியாழக்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.
திருத்தங்கலில் கட்டடத் தொழிலாளியை காணவில்லை என போலீஸில் வியாழக்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.
திருத்தங்கல் காளிமுத்து நகரைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி பழனிச்சாமி (43). இவா், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம். இதையடுத்து இவருக்கும், இவரது மனைவி அழகுலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில் ஜூன் 26 ஆம் தேதி கடைக்கு சென்று வருகிறேன் எனக்கூறிச் சென்ற பழனிச்சாமி மீண்டும் வீடுதிரும்ப வில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.