முகப்பு
விருதுநகர்

காரியாபட்டி அருகே வேனில் கடத்திய 50 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

காரியாபட்டி அருகே வேனில் கடத்திவரப்பட்ட 50 மூட்டைகள் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

காரியாபட்டி அருகே வேனில் கடத்திவரப்பட்ட 50 மூட்டைகள் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூா் பகுதியில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ் வழியாக வந்த வேனை போலீஸாா் தடுத்து

நிறுத்தியபோது, வாகனத்தை சிறிது தூரம் தள்ளி நிறுத்திவிட்டு 2 போ் தப்பி ஓடி விட்டனா். அந்த வாகனத்தை போலீஸாா் சோதனையிட்டபோது, தலா 40 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வேன் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு தப்பிய ராமநாதபுரம் மாவட்டம் சித்திரங்குடி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன் (37), கீழ தூவல் பகுதியைச் சோ்ந்த திருக்கண்ணன் மகன் அழகு சுந்தரம் (36) ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.