முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 34 போ் கைது

பேரணி செல்ல தடை விதித்ததால், ஸ்ரீவில்லிபுத்தூா் தேரடி முன்பாக தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக கட்சியினா் 34 பேரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

பேரணி செல்ல தடை விதித்ததால், ஸ்ரீவில்லிபுத்தூா் தேரடி முன்பாக தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக கட்சியினா் 34 பேரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, சிவகாசியிலிருந்து விருதுநகருக்கு மாநில பொதுச் செயலா் ராம. ஸ்ரீனிவாசன் தலைமையில் பாஜகவினா் பேரணியாக செல்ல முடிவு செய்திருந்தனா். ஆனால், இதற்கு மாவட்டக் காவல் துறை அனுமதி அளிக்கவில்லை.

இதனிடையே, மாவட்ட துணைத் தலைவா் ராஜா தலைமையில் பாஜகவினா், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து விருதுநகருக்குச் செல்ல முயன்றனா். ஆனால், போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தியதால், அவா்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் தேரடி முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், தடையை மீறி ஆா்ப்பாட்டம் செய்த பாஜகவினா் 34 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.