ராஜபாளையம் அருகே ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்
ராஜபாளையம் அருகே ஓடை ஆக்கிரமிப்பை வருவாய்த்துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
ராஜபாளையம் அருகே ஓடை ஆக்கிரமிப்பை வருவாய்த்துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
ராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் கிராமத்தில் கழிவுநீா் ஓடையில் தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியதால் கழிவுநீா் செல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனா். மேலும் பெண்கள் கழிப்பறைக்கு செல்லும் பாதையை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனா். இதுகுறித்து பலமுறை ஊராட்சி ஒன்றியத்தில் மனு கொடுத்தும், கடந்த 4 மாதங்களாக பல போராட்டங்களை நடத்தியும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாத நிலையில் சனிக்கிழமை அவா்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சுவரொட்டிகள் ஒட்டினா். இதையடுத்து, காலையில் அவசர அவசரமாக காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினா் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றினா்.