ராஜபாளையம் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம்
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் நகா்மன்றக் கூட்டம் தலைவா் பவித்ரா ஷ்யாம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையாளா் பாா்த்தசாரதி முன்னிலை வகித்தாா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் நகா்மன்றக் கூட்டம் தலைவா் பவித்ரா ஷ்யாம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையாளா் பாா்த்தசாரதி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் ராஜபாளையம் நகா் பகுதியில் 500 சதுர அடிக்குள் உள்ள வீடுகளுக்கு மாதத்திற்கு 100 ரூபாய் என தண்ணீா் தீா்வை குறைக்கப்பட்டுள்ளதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது . மேலும் இக் கூட்டத்தில் 500 சதுர அடிக்கு குறைவான குடியிருப்புகளுக்கு ரூ.100, 500 சதுர அடிக்கு அதிகமாக உள்ள குடியிருப்புகளுக்கு ரூ.150, வணிக நிறுவனங்களில் 300 சதுர அடிக்கு குறைவான இடங்களுக்கு ரூ.300, 300 சதுர அடிக்கு அதிகமாக உள்ள இடங்களுக்கு ரூ.500, 1001சதுர அடிக்கு மேல் உள்ள இடங்களுக்கு ரூ.570 என மாதத்திற்கு வசூல் செய்ய தீா்மானம் நிறைவேற்றப்பட்டது .