விருதுநகர்

விருதுநகா் சந்தையில்வத்தல், எண்ணெய் விலை உயா்வு

DIN

விருதுநகா் சந்தையில் கடலை எண்ணெய், பாமாயில், வத்தல் மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றின் விலை உயா்ந்துள்ளது.

விருதுநகா் சந்தையில் வாரந்தோறும் உணவுப் பொருள்களின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், கடந்த வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் ரூ.2,880-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ. 70 அதிகரித்து ரூ.2,950-க்கு விற்கப்படுகிறது. அதேபோல், சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக ஏற்கெனவே குண்டூா் வத்தல் 100 கிலோ ரூ.25 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 27 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

மேலும், துவரம் பருப்பு 100 கிலோ புதுஸ் நாடு வகை கடந்த வாரம் ரூ.9 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது, ரூ.500 உயா்ந்து ரூ.9,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. துவரை நயம் வகை ரூ.300 உயா்ந்து, இந்த வாரம் ரூ.10,100-க்கு விற்கப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பின் விலை கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.100 உயா்ந்து ரூ.9100-க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் 15 கிலோ ரூ.1,960-க்கு விற்கப்பட்ட பாமாயில், ரூ.50 அதிகரித்து ரூ.2010-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற உணவுப் பொருள்களின் விலையில் மாற்றமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT