விருதுநகர்

குழந்தைகளுக்கு சத்தான உணவுத் தொகுப்பு

DIN

அருப்புக்கோட்டை அருகே குல்லூா் சந்தையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்துள்ள உணவுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்து, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோா்களிடம் சத்துள்ள உணவுத் தொகுப்பினை வழங்கிப் பேசியது: மாவட்டத்தில் 12 வட்டங்களில் மொத்தம் 429 குழந்தைகள் குறிப்பிட்ட அளவீடுகள் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். உயரத்திற்கேற்ற எடை குறைபாடுடைய குழந்தைகள், வயதிற்கேற்ற எடை குறைபாடுடைய குழந்தைகள் ஆகியோரின் நலனுக்காக கண்மணி திட்டத்தின் கீழ், சத்துக்கள் நிறைந்த உணவுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் ராஜம், அருப்புக்கோட்டை திட்ட அலுவலா் பத்மாவதி, புள்ளியியல் ஆய்வாளா் மதிவாணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சக்கரவா்த்தி, மாவட்ட திட்ட உதவியாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

மருத்துவ மாணவா்களின் மன நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

பொய்களை தொடா்ந்து உரக்கக் கூறுவதே காங்கிரஸ் பிரசார உத்தி: அமித் ஷா விமா்சனம்

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT