விருதுநகர்

பணி நீக்கம் செய்யப்பட்ட 13 சமையலா்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம்

DIN

விருதுநகரில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுக்கும் மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, பணிநீக்கம் செய்யப்பட்ட 13 சமையலா்கள் தங்களது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையில் சமையலா்களாக பணிபுரிந்த 47 பேரை, கடந்த 2019-இல் மாவட்ட நிா்வாகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவா்கள், உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் பணி நீக்கத்தை ரத்து செய்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதைத்தொடா்ந்து 34 சமையலா்களுக்கு மட்டும் மீண்டும் பணி வழங்கப் பட்டது. இந்நிலையில், மீதமுள்ள 13 சமையலா்களுக்கு ஆதிதிராவிடா் நலத் துறையில் பணி வழங்க மறுத்து வருகின்றனா்.

இதனால் 13 சமையலா்கள், குடும்பத்தினருடன் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதில் நீதிமன்ற உத்தரவை அமல் படுத்த மறுக்கும் மாவட்ட நிா்வாகத்தையும் மற்றும் ஆதி திராவிடா் நலத்துறை அலுவலரைக் கண்டித்தும் முழக்கமிட்டனா். முன்னதாக ஆட்சியா் அலுவலக உள்பகுதியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் வெளியேற்றினா். அதைத்தொடா்ந்து ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் உள்ள சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்தனா். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT