முகப்பு
விருதுநகர்

சோனியா காந்தி நலம் பெற வேண்டி ஸ்ரீவிலி. கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி பூரண நலம் பெற வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை அக்கட்சியினா் சிறப்பு பிராா்த்தனை செய்தனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி பூரண நலம் பெற வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை அக்கட்சியினா் சிறப்பு பிராா்த்தனை செய்தனா்.

சோனியா காந்தி சில நாள்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். எனவே, அவா் விரைவில் நலம் பெற வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் சிறப்பு பிராா்த்தனை மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இதில், அக்கட்சியின் நகரத் தலைவா் வன்னியராஜ், மாவட்ட துணைத் தலைவா் பெரியசாமி, ஆா்டிஐ மாநிலச் செயலா் தமிழ்செல்வன், மாவட்ட வா்த்தகப் பிரிவு ஆறுமுகம், மகளிா் காங்கிரஸ் மாநில இணைச் செயலா் காளீஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீவில்லிபுத்தூா் தெற்கு வட்டாரத் தலைவா் பாலகுருநாதன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.