விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மரத்தின் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 13 பேர் காயம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர்:  மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்ல அரசு பேருந்து ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று காலை 8 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை விருதுநகர் புல்லக் கோட்டையை ஓட்டுநர் முனுசாமி என்பவர் ஓட்டி வந்தார். பேருந்தில் சுமார் 45 பயணிகள் இருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் சுமார் 13 பேர் காயமடைந்தனர்.

இவ்விபத்து பற்றி தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல்துறையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து நடந்த பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை தேசிய நெடுஞ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  நகர காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர்

காயமடைந்த 13 பேரில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT