விருதுநகா் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே ஊழியா்கள். 
விருதுநகர்

விரைவு ரயில்களை தனியாருக்கு விற்கக் கூடாது:ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து, விருதுநகரில் ரயில்வே ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து, விருதுநகரில் ரயில்வே ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தென்னக ரயில்வே தொழிலாளா் சங்கத்தின் துணைப் பொதுச் செயலா் ஜெயராம் தலைமை வகித்தாா். இதில், சுற்றுலா என்ற பெயரில் கோவை- ஷீரடி விரைவு ரயிலை தனியா ருக்கு விற்பனை செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ராமாயண யாத்ரா என்ற பெயரில் புதுதில்லி- நேபாளம் ரயிலை ஐஆா்சிடிசி-க்கு விற்பனை செய்ததை வாபஸ் பெறவேண்டும். பாரத் கெளரவ் என்ற பெயரில் சுற்றுலா ரயில்கள் என 100 ரயில்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை உடனே கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான ரயில்வே ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT