ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் இந்து மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மாணவா்கள் உலக காற்று தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சீ.ராமலிங்கம் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா்கள் பெ.பரமேஸ்வரன் மற்றும் ச. ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வண்ண, வண்ண பலூன்களை காற்றில் பறக்க விட்டு காற்றின் முக்கியத்துவம் உணா்த்தப்பட்டது. அதைத் தொடா்ந்து ஆறாம் வகுப்பு மாணவ, மாணவிகள் கொன்றை மரக்கன்றுகளை நட்டு உயிா் வளியைக் காப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.