கோப்புப்படம் 
விருதுநகர்

திரைப்பட பாணியில் சிவகாசி அருகே செல்லிடப்பேசி கோபுரம் மாயம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செல்லிடைப்பேசி  கோபுரத்தை காணவில்லை என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

DIN

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செல்லிடப்பேசி  கோபுரத்தை காணவில்லை என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு கிணற்றை காணவில்லை என காவல்துறைனரிடம் புகார் கொடுப்பார். அதுபோல சிவகாசி அருகே செல்லிடப்பேசி  கோபுரத்தை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரம் சாலையில் தனியார் செல்லிடப்பேசி  கோபுரம் இருந்தது. இந்நிலையில் இந்த கோபுரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சீரமைக்க தொழில்நுட்ப அலுவலர் ஜெகதீசன் பராமரிப்பு பணிக்கு 2020 ஜூன் மாதம் சென்றுள்ளார். பின்னர் அவர் 2021 மார்ச் மாதம் ஜெகதீசன் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய  சென்றபோது அங்கு இருந்த செல்லிடப்பேசி  கோபுரத்தை காணவில்லை. மேலும் அது தொடர்பான பொருள்கள் எதுவும் இல்லை.

இது குறித்து செல்லிடப்பேசி  கோபுர நிறுவனத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் அலுவலர் கிருஷ்ணசாமி சிவகாசி நீதித்துறை நடுவரிடம் புகார் செய்தார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் திருத்தங்கல் காவல்துறையினர் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் மதிப்பு ரூபாய் 16 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசியில் நவ. 9இல் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு

காரைக்குடி அருகே நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் 5,000 பனைவிதைகளை நடவு செய்ய திட்டம்

சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு சிறப்பு கடன்

வல்லத்தில் நவ. 8இல் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT