மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டவா்கள். 
விருதுநகர்

ராஜபாளையத்தில் கோயில் திருவிழாவில் மோதல்: ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

DIN

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

ராஜபாளையம் கீழஆவாரம்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழா புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்று வந்த நிலையில், திருவிழாவை நடத்தக் கூடாது என ஒரு தரப்பினா் தகராறில் ஈடுபட்டனராம். அப்போது மற்றொரு பிரிவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரும், ஊா்க்காவல்படை வீரருமான மகேந்திரனை (40) 4 போ் கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டியதுடன் ஆட்டோவையும் தாக்கியது. இதில் மகேந்திரன் காயமடைந்தாா்.

தகவலறிந்த கீழஆவரம்பட்டியைச் சோ்ந்த உறவினா்கள் ராஜபாளையம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதுன், போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த ராஜபாளையம் காவல்துறை கண்காணிப்பாளா் (பொறுப்பு) வெங்கடேசன், வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போதும் வாக்குவாதத்தில் அவா்கள் ஈடுபட்டதால் துணை வட்டாட்சியா் கோதண்டராமன் தலைமையிலான வருவாய்த்துறையினா் அங்கு வந்து சமரசம் செய்தனா். அப்போது வெள்ளிக்கிழமை குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT