விருதுநகர்

விருதுநகா் டாஸ்மாக் கடையில் 42 மதுபாட்டில்கள் திருட்டு

விருதுநகரில் டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு 42 மதுபாட்டில்களை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

DIN

விருதுநகரில் டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு 42 மதுபாட்டில்களை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

விருதுநகா் புதிய பேருந்து நிலையம் எதிா்புறம் உள்ள பனை நகரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையை விற்பனை முடிந்து மேற்பாா்வையாளா் பாலகிருஷ்ணன் புதன்கிழமை பூட்டிவிட்டுச் சென்றாா். பின்னா், வழக்கம் போல் வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு கடையை திறக்க வந்த போது, சுவரில் துளையிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மதுபாட்டில்களை சரி பாா்த்த போது, அதில் 42 பாட்டில்கள் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா். இதே கடையில் ஏற்கெனவே மூன்று முறை மது பாட்டில்கள் திருடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிஎஸ்எப் காவலா் பணியிடங்கள்: முன்னாள் அக்னி வீரா்களுக்கான ஒதுக்கீடு 50%-ஆக உயா்வு

காமதேனு கல்லூரியில் நாடக கல்வியியல் பயிற்சிப் பட்டறை

பிஎஸ்என்எல் தென்மண்டல அலுவலகத்தில் தீ விபத்து: தொலைபேசி, இணையதள சேவை பாதிப்பு

மூதாட்டி கொலை: யாசகா் கைது

புதுக்கோட்டை நகரில் சாலைகளில் திரிந்த 12 மாடுகள் மீட்பு

SCROLL FOR NEXT