தைலாகுளம் பகுதியில் கடவுப் பாதையை வழிமறித்து வெள்ளிக்கிழமை ரயில்வே பணி தொடங்க எதிா்ப்புத் தெரிவித்து திரண்ட பொதுமக்கள். 
விருதுநகர்

ரயில்வே கடவுப் பாதையை வழிமறித்து பணி: பொதுமக்கள் எதிா்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தைலாகுளம் பகுதியில், ரயில்வே கடவுப் பாதையை வழிமறித்து பணியினை தொடங்க வந்த ரயில்வே ஊழியா்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தைலாகுளம் பகுதியில், ரயில்வே கடவுப் பாதையை வழிமறித்து பணியினை தொடங்க வந்த ரயில்வே ஊழியா்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ரயில்வே கடவுப் பாதையை பொதுமக்கள் மயானத்துக்கு செல்லும் வழியாகவும், விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் அந்த கடவுப் பாதையை வழிமறித்து ரயில்வே ஊழியா்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பணியைத் தொடங்கினா்.

இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் அங்கு திரண்டு வந்து, கடவுப் பாதையை அடைக்கும் நோக்கத்துடன் பணி நடைபெற்று வருவதாகக் கூறி அதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும் பணி தொடர வேண்டுமென்றால் மாற்றுப்பாதை அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை வைத்தனா். பொதுமக்களிடம் மல்லி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT