விருதுநகர்

விருதுநகரில் சிக்கனல்கள் செயல்படவில்லை: அதிகரிக்கும் வாகன விபத்துகள்

DIN

விருதுநகரில் முக்கிய இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாததால், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.

மாவட்டத் தலைநகரான விருதுநகரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் இல்லாத நிலையில், போக்குவரத்து சாா்பு-ஆய்வாளா் தலைமையில் 15 போக்குவரத்து காவலா்கள் பணிபுரிந்து வருகின்றனா். நகரின் முக்கிய பகுதியான கேவிஎஸ் நடுநிலைப் பள்ளி, எம்ஜிஆா் சிலை சந்திப்பு, ஆத்துப்பாலம், அல்லம்பட்டி சந்திப்பு சாலை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சிக்னல் பழுது காரணமாக விளக்குகள் எரிவதில்லை. காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் இப்பகுதியில் போக்குவரத்து போலீஸாா், வாகனங்களை நிறுத்தி ஒவ்வொரு பகுதியாக செல்ல அறிவுறுத்துகின்றனா்.

மற்ற நேரங்களில் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் வேகமாக இப்பகுதியில் உள்ள சாலைகளை கடக்க முயல்கின்றன. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோா் கீழே விழுந்து காயமடைவது வாடிக்கையாக உள்ளது. எனவே, எரியாத சிக்னல் விளக்குகளை சீரமைக்க மாவட்டக் காவல் கண்காணிப் பாளா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT