முகப்பு
விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே விஷம் குடித்து ஒருவா் தற்கொலை

வத்திராயிருப்பு அருகே வியாழக்கிழமை விஷம் குடித்து ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
பகிர்:

வத்திராயிருப்பு அருகே வியாழக்கிழமை விஷம் குடித்து ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள வலையன்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி (50). இவருக்கு, மதுஅருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் மனமுடைந்த குருசாமி வியாழக்கிழமை கோட்டையூா் கடப்பன்குளம் கண்மாயில் உள்ள ஒரு வீட்டின் முன்பு விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தாா். உடனடியாக அவரை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.