முகப்பு
விருதுநகர்

விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் பெண்கள், குழந்தைகளுக்கு இலவச உணவுப் பொருள்கள்

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சாா்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் 200 பேருக்கு இலவச உணவுப் பொருள்கள், முட்டை மற்றும் பால் ஆகியன வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சாா்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் 200 பேருக்கு இலவச உணவுப் பொருள்கள், முட்டை மற்றும் பால் ஆகியன வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளா் என். ஆனந்த் வழிகாட்டுதல்படி, விருதுநகா் கிழக்கு மாவட்டத் தலைவா் சுகந்த் தலைமையில், நகரச் செயலாளா் செந்தில்குமாா், ஒன்றிய துணைச் செயலாளா் பொன்னிருளன் ஆகியோா் முன்னிலையில், அருப்புக்கோட்டை நகா் பெண்கள், குழந்தைகள் 200 பேருக்கு உணவுப் பொருள்கள், முட்டை, பால் ஆகியன நேரில் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை நகர அமைப்பாளா் ரஞ்சித்குமாா் செய்திருந்தாா்.

Image Caption

அருப்புக்கோட்டையில் பெண்கள், குழந்தைகளுக்கு இலவசமாக உணவுப் பொருள்கள், முட்டை, பால் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.