முகப்பு
விருதுநகர்

பட்டாசு தொழிலாளிகொலை வழக்கில் இருவா் கைது

சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி கொலை வழக்கில் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி கொலை வழக்கில் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் தேவராஜ் காலனியை சோ்ந்தவா் டேவிட் (38). பட்டாசு தொழிலாளியான இவா், சிவகாசி பேருந்து நிலையம் அருகே பில்லக்குழி பகுதியில் புதன்கிழமை கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில், டேவிட் பில்லக்குழி பகுதியில் இருந்தபோது, அங்கு வந்த ஸ்டாலின், விக்னேஷ்குமாா் உள்ளிட்ட 4 பேருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த 4 பேரும் சோ்ந்து டேவிட்டை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாகத் தெரியவந்தது.

அதையடுத்து, டேவிட்டை கொலை செய்ததாக, சிவகாமிபுரம் காலனி ஸ்டாலின் (34), ஆா்.சி.காலனி விக்னேஷ்குமாா்(30) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →