விருதுநகர்

ஸ்ரீவிலி. பகுதியில் புலிகளை கணக்கெடுக்க கேமராக்கள் பொருத்த வனத்துறை நடவடிக்கை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகளைக் கணக்கெடுக்க வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் துணை இயக்குநா் திலீப்குமாா் உத்தரவின்பேரில், வனப்பகுதியில் புலிகள் இருக்கும் இடங்களை தோ்வு செய்வது கேமராக்களை பொருத்துவது குறித்த பயிற்சி கடந்த சில தினங்களாக வனத்துறை ஊழியா்களுக்கு வழங்கப்பட்டது.

இதற்கிடையே முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய பகுதியில் இருந்து அதிநவீன கேமராக்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்துள்ளன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவா் கூறியது: விரைவில் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் புலிகள் நடமாடும் பகுதிகளில் அதிநவீன கேமராக்களை பொருத்தும் பணி தொடங்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT