சாத்தூர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண் புகை பிடிப்பான் கண்டறியப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த அகழாய்வில் முன்னதாக சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடு மண், அகல்விளக்கு, யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன் மற்றும் பதக்கம், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, காலத்தால் அழியாத கலை நயம் மிக்க கண்கவர் குவளை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்பொழுது சுடுமண்ணால் ஆன புகைபிடிப்பான் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்போதைய தொன்மையானவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டுள்ளதை உறுதி செய்வதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.