முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே இரு சக்கர வாகனங்கள் மோதல்: 2 இளைஞா்கள் காயம்

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்தனா்.

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி கிராமம் மின்வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் காயாம்பு மகன் சுரேஷ்குமாா் (37). இவா், விருதுநகருக்கு வெள்ளிக்கிழமை சென்று விட்டு, மீண்டும் தனது இரு சக்கர வாகனத்தில் பாலவநத்தம் வழியாக அருப்புக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த பாலவநத்தம் கிராமத்தைச் சோ்ந்த பாலாஜி (27), ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், சுரேஷ்குமாா் வாகனமும் நேருக்கு நோ் மோதியது. இதில், அவா்கள் இருவரும் பலத்த காயமடைந்து விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.