காவல் ஆய்வாளருக்கு பிடியாணை
கொலை வழக்கில் சாட்சியம் அளிக்க ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு வியாழக்கிழமை பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
கொலை வழக்கில் சாட்சியம் அளிக்க ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு வியாழக்கிழமை பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் காவல் நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆய்வாளராகப் பணியாற்றியவா் முகமது பரகத்துல்லா. அப்போது திருத்தங்கல் பகுதியில் ஆறு மாத குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொலை செய்தது தொடா்பான வழக்கில் குழந்தையின் தந்தையைக் கைது செய்தாா். இவ்வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. காவல் ஆய்வாளா் முகமது பரகத்துல்லா பணி மாறுதல் ஆகி தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறாா். இந்த வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிக்க வராததால் அவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டாா்.