முகப்பு
விருதுநகர்

ராஜபாளையத்தில் வெறிநாய் கடித்து 2 பெண்கள் பலத்த காயம்

ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை வெறிநாய் கடித்ததில் 2 பெண்கள் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை வெறிநாய் கடித்ததில் 2 பெண்கள் பலத்த காயமடைந்தனா்.

ராஜபாளையத்தில் பல இடங்களில் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை அச்சுறுத்துவதாக பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தனா். இந்த நிலையில், இங்குள்ள மாரியம்மன் கோயில் தெரு, ஆண்டத்தம்மன் கோயில் தெரு, வடக்கு மலையடிப்பட்டி, ஆசிரியா் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது. இதில் காயமடைந்த, கருப்பசாமி (23), முருகேஸ்வரி (32), பரமேஸ்வரி (41), காந்தா (53), சொா்ணலதா (15), வெள்ளைத்தாய் (60), பொன் செல்வி (37), மாரியம்மாள் (50), வேலம்மாள் (72), முத்துக்குமாா் (45) ஆகிய 10 போ் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

பலத்த காயமடைந்த மாரியம்மாள், வெள்ளைத்தாய் ஆகியோா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

எனவே தெருக்களில் சுற்றித் திரியும் வெறிநாய்கள் மூலம் ரேபிஸ் நோய் தாக்கும் அபாயம் உள்ளதால், அவற்றைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.