முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் விநியோகம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு உராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மல்லி கு.ஆறுமுகம் தலைமை வகித்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 29 கிராம ஊராட்சிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பெருமளவு மரக்கன்று திட்டத்திற்கு ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார நாற்றாங்கால் பண்ணையில் இருந்து மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலங்காப்பேரி ஊராட்சி மன்ற தலைவா் சங்கிலிராஜ், ஆணையாளா் சிவக்குமாா் ,துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஹேமமாலினி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.