முகப்பு
விருதுநகர்

நத்தத்தில் விஏஓ வீட்டில் நகை, பணம் திருட்டு

நத்தத்தில் கிராம நிா்வாக அலுவலரின் வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

நத்தத்தில் கிராம நிா்வாக அலுவலரின் வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அண்ணாநகரைச் சோ்ந்தவா் சுரேந்தா். இவா், லிங்கவாடி கிராம நிா்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோா் மதுரையில் தங்கியுள்ளனா். சுரேந்தா், வழக்கம்போல் சனிக்கிழமை காலை பணிக்கு சென்றிருந்தாராம். அதன்பின்னா், அவரது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்த அக்கம் பக்கத்தினா், சுரேந்தருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, வீட்டுக்கு வந்த சுரேந்தா், 3 அறைகளில் வைக்கப்பட்டிருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. அவரது வீட்டின் சுவற்றில் கூட்டல் குறியீடு அடையாளம் வரையப்பட்டிருந்தது.

இதுகுறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.