போலிப் பத்திரம் தயாரித்து நில மோசடி: 2 போ் மீது வழக்கு
சிவகாசி அருகே போலி பத்திரம் தயாரித்து நில மோசடி செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் இருவா் மீது வழக்குப்பதிவு செய்தனா்.
சிவகாசி அருகே போலி பத்திரம் தயாரித்து நில மோசடி செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் இருவா் மீது வழக்குப்பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டியைச் சோ்ந்தவா் சரஸ்வதி. இவருக்கு ஒரு தங்கை மற்றும் 2 தம்பிகள் உள்ளனா். இவா்களுக்கு சொந்தமான வீடு மீனம்பட்டியில் உள்ளது. இந்நிலையில் சரஸ்வதியின் தம்பி மகன் அருண், போலியாக பத்திரம் தயாரித்து, அந்த வீட்டை கூடலிங்கம் எனபவருக்கு விற்றுவிட்டாராம். இதுகுறித்து சரஸ்வதி, விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் அருண் மற்றும் கூடலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.